திருநள்ளாறு கோயிலுக்கு சிறப்பு சாட்டிலைட் சேனல் : துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தல்

திருநள்ளாறு கோயிலுக்கு சிறப்பு சாட்டிலைட் சேனலை உருவாக்கவேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.

திருநள்ளாறு கோயிலுக்கு சிறப்பு சாட்டிலைட் சேனலை உருவாக்கவேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு வாரம் புதுச்சேரியிலிருந்தவாறு காணொலி மூலம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காரைக்கால் மக்களிடம் குறை கேட்பு நடத்திவருகிறார். இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன், சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன், மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன், திருநள்ளாறு கோயில் நிóர்வாக அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருநள்ளாறு பகுதி சுரக்குடியை சேர்ந்த சந்திரமௌலி ஆளுநரிடம் கூறியது: புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரன் வீற்றிருக்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில், காரைக்காலில் அம்மையார் கோயில் உள்ளன. இவ்விரு கோயில்களின் புகழ் பரப்ப, வருடாந்திர காலண்டர், டைரி ஆகியவை வெளியிடப்படுவதில்லை. வரலாறு புத்தகம் சுற்றுலாவினருக்கு தரும் வகையில் ஏற்பாடு செய்யப்படவில்லை. கோயில்களின் புகழைப்பரப்பும் செயல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவுக்குள் இக்கோயிலுக்கென சிறப்பு சாட்டிலைட் சேனல் உருவாக்கவேண்டும். திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியை அரசு நியமிக்கவேண்டும். காரைக்கால் பச்சூர் சுடுகாட்டில் சடலம் எரியூட்டும் இயந்திரப் பழுதை சீர்செய்யவேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் மது விலக்கு அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
பாஜகவை சேர்ந்த துரைசேனாதிபதி பேசும்போது, காரைக்காலில் கிராமப்புற வேலை உறுதித் திட்டப்பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஊழலற்ற செயல்பாடுகளுக்கு உரிய கண்காணிப்புப் பணிக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். மேலும் சிலர், வீடு கட்ட மனைப்பட்டா மற்றும் அடிப்படை வசதிகள் செய்துத்தரக்கோரி பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com