தூய சகாய அன்னை ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோட்டுச்சேரியில் புகழ்பெற்ற தூய சகாய அன்னை ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோட்டுச்சேரியில் புகழ்பெற்ற தூய சகாய அன்னை ஆண்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியில் தூய சகாய அன்னை ஆலயத்தில் 10 நாள் திருவிழா தொடக்கமாக கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டுச்சேரி பங்குத் தந்தை அந்தோணி லூர்துராஜ், கோட்டுச்சேரி பங்குத் தந்தை எல்.ஜெரால்டு ஆகியோர் கூட்டுத் திருப்பலி நடத்தினர். அந்தோணி லூர்துராஜ் கொடியேற்றிவைத்தார். ஏராளமான மக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமும் திருப்பலி, தேர்பவனி மாலை வேளையில் நடைபெறுகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து பங்கு குருக்கள் பலர் வந்து நற்கருணை ஆசீர்வாதம் செய்கின்றனர். ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும், கோட்டுச்சேரி பங்குக்குள்பட்ட கிராமத்தினர் முன்னின்று நடத்துகின்றனர்.
நிறைவு நிகழ்ச்சியாக வரும் 27-ஆம் தேதி பெருவிழா திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார தேர் பவனி நடைபெறுகிறது. புதிதாக தேக்கு மரத்தால் செய்யப்பட்ட 2 தேர்களில் நிகழாண்டு பவனி நடைபெறவுள்ளதாக நிர்வாகத்தார் தெரிவித்தனர். 28-ஆம் தேதி கொடியிறக்கம் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com