ராஜீவ்காந்தி நினைவு நாள்: வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி காரைக்கால் ஆட்சியரகத்தில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ராஜீவ்காந்தி நினைவு நாளையொட்டி காரைக்கால் ஆட்சியரகத்தில் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்
கொள்ளப்பட்டது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுநாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் ஆட்சியரகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன், காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து, தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
 அமைச்சர் தலைமையில் அரசுத் துறையினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
 வன்முறை எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துகளை மும்மதத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் விளக்கிப் பேசினர். தேசபக்திப் பாடல்கள்
இசைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com