"ஜெல்லி மீன்களை தொட வேண்டாம்'

காரைக்கால் கடற்கரையில் உலாவும் ஜெல்லி மீன்களை பொதுமக்கள் தொடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் கடற்கரையில் உலாவும் ஜெல்லி மீன்களை பொதுமக்கள் தொடவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் கடற்கரை பகுதியில் கடல் வாழ் உயிரினமான ஜெல்லி மீன்கள் தற்போது காணப்படுகிறது. இது நமது உடலின் மீது படும்போது எரிச்சல், அரிப்பு போன்ற ஒவ்வாமைகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, காரைக்கால் கடற்கரைக்குச் செல்வோர் இந்த வகை மீன்களை தொடவேண்டாம். மேலும், கடல் பகுதியில் குளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com