ஆறுகளில் கடைமடை மதகுகளை மூட வலியுறுத்தல்

காரைக்கால் பகுதி ஆறுகளில் கடைமடை அணை மதகுகளை தண்ணீர் தேவைக் கருதி மூடவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால் பகுதி ஆறுகளில் கடைமடை அணை மதகுகளை தண்ணீர் தேவைக் கருதி மூடவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவர் ஐ. அப்துல்ரஹீம், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: பருவ மழையால் காரைக்கால் பகுதி ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை பெய்து கொண்டிருந்த நிலையில், வெள்ள நீர் வரத்தால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது எனக் கருதி மாவட்ட நிர்வாகம் ஆறுகளின் குறுக்கே உள்ள கடைமடை அணை மதகுகளை திறந்து வைத்திருந்தது. இதனால் தண்ணீர் கடல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 2 நாள்களாக காரைக்கால் பகுதியில் மழை இல்லாததால்,  ஆறுகளில் வரும் தண்ணீரை தேக்கிவைப்பதே சிறந்ததாகும். காரைக்கால் பகுதியில் குடிநீர்த் தேவை, நிலத்தடி நீர் பெருக்கம், விவசாயம் ஆகியவற்றுக்கு தண்ணீர் தேவையிருக்கிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அலுவலர்களை அழைத்துப்பேசி, தண்ணீரை  தேக்கி வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com