பாப்ஸ்கோ ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்

காரைக்கால் பகுதி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊதிய நிலுவை வழங்கக் கோரி புதன்கிழமை தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்து, வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினர்.

காரைக்கால் பகுதி பாப்ஸ்கோ ஊழியர்கள் ஊதிய நிலுவை வழங்கக் கோரி புதன்கிழமை தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நிறைவு செய்து, வெள்ளிக்கிழமை பணிக்குத் திரும்பினர்.
புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி வழங்கல், பெட்ரோல் நிலையம், மதுபான வியாபாரம், பள்ளிகளுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல்
உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களுக்கு கடந்த 10 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, வேலை நிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர். 2 நாள்களாக நீடித்த இந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு கைவிடப்பட்டது.
இதுகுறித்து பாப்ஸ்கோ ஊழியர் சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை கூறியது: புதுச்சேரியில் ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் அரசு உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஒரு மாத ஊதியம் அடுத்த வாரத்தில் வழங்குவதாகவும், வரும் மாதங்களில் இருந்து மாதந்தோறும் ஊதியம் வழங்குவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது என்றார். இரண்டு நாள் போராட்டத்துக்குப் பிறகு பாப்ஸ்கோ ஊழியர்கள் வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் பணிக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com