தெற்காசிய கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு பாராட்டு

நேபாளத்தில் நடந்த தெற்காசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காரைக்கால் வீரருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

நேபாளத்தில் நடந்த தெற்காசிய அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற காரைக்கால் வீரருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி படுதார்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் மகன் முத்துவேல். பி.காம் பட்டதாரியான இவர், கைப்பந்து விளையாட்டில் மாநில மற்றும் தென் மாநில அளவிலான போட்டிகளில்  சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இவர், நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டில் கடந்த அக்டோபர் மாதம்  27 மற்றும் 28-ஆம் தேதிகளில் நடைபெற்ற , 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான கைப்பந்துப் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.
இப்போட்டியில் இந்தியா, நேபாளம், பூட்டான், வங்கசேதம் ஆகிய நாடுகளில் இருந்து அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் நேபாளத்தை எதிர்த்து இந்திய அணி விளையாடி வெற்றிபெற்றது. சிறப்பாக விளையாடியமைக்காக காரைக்கால் வீரர் முத்துவேலுக்கு சிறப்புப் பரிசு தரப்பட்டது.
பின்னர், காரைக்கால் திரும்பிய முத்துவேல், சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், காரைக்காலுக்கு திங்கள்கிழமை வந்த அமைச்சர்கள் ஆ. நமச்சிவாயம், ஆர். கமலக்கண்ணன் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
 ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவரது பயணத்துக்கான முன்னேற்பாடுகளுக்கு புதுச்சேரி அரசு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.25 ஆயிரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com