காரைக்கால் பள்ளிகளில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

காரைக்காலில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கோவிந்தசாமி பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி: கோவிந்தசாமி பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் அ. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். அண்ணா அரசு கலைக் கல்லூரி ஓய்வு பெற்ற பேராசியர் கே.பி. சிவராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று குழந்தைகள் தின சிறப்பு குறித்துப் பேசினார். மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் எஸ். அறிவழகன், என். சரஸ்வதி பாலா, ஏ. லூர்துமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தக்களூர் அரசு தொடக்கப்பள்ளி:  தக்களூர் அரசு தொடக்கப்பள்ளியில், பள்ளி பொறுப்பாசிரியர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருநள்ளாறு டிவைன் சிட்டி லயன் சங்கத் தலைவர்  என். பாலு  உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.  மாணவர்கள் பல்வேறு வேடமிட்டு பேசி, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள்  உமா, சங்கர்தேவி, வரலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
காரைக்கால் பிரைட் அகாதெமி பள்ளி: பிரைட் அகாதெமி பள்ளியில், ஆசிரியர், ஆசிரியைகள் தனியாகவும், குழுவாகவும் கவிதை, பாடல், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தினர். பள்ளி முதல்வர் மோகனவித்யாவதி உள்ளிட்ட ஆசிரியர்கள் குழந்தைகள் தினம் குறித்துப் பேசினர். மாணவ, மாணவியர்களுக்கு பென்சில் வழங்கப்பட்டது.
காரைக்கால் தருமபுரம் எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி: எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில், தாளாளர் கே. செல்லையன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவியர்கள் ஃபகுமித்தா, யாசினுல் ஃபாசிகா ஆகியோர் குழந்தைகளை வாழ்த்தும் விதமாக பாடல் பாடினர். பள்ளி முதல்வர் எஸ். கந்தசாமி, துணை முதல்வர் டி. சுமதி, தலைமையாசிரியர் ஜி. ராஜேந்திரன் குழந்தைகள் தினம் குறித்து பேசினர். மாணவர்கள் சிவன், முருகன், ரோபோ, பாரதியார், அனுமன், அப்துல்கலாம், கிருஷ்ணர், திருவள்ளுவர் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு வந்து பேசினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com