"சிறந்த எதிர் காலத்துக்கு பிற மொழிகளில் ஆளுமை அவசியம்'

சிறந்த எதிர் காலத்துக்கு மாணவர்கள் பிற மொழிகளில் ஆளுமை பெறுவது அவசியம் என மாவட்ட கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தினார். 

சிறந்த எதிர் காலத்துக்கு மாணவர்கள் பிற மொழிகளில் ஆளுமை பெறுவது அவசியம் என மாவட்ட கூடுதல் ஆட்சியர் அறிவுறுத்தினார். 
முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவாக மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டுவருகிறது. 3-ஆம் நாள் நிகழ்ச்சியாக, காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பன்மொழி இணக்க நாள் கொண்டாடப்பட்டது.
இதில்,  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ் பேசியது :
இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. புதுச்சேரியில் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, மலையாளம், தெலுங்கு என பல மொழி பேசுவோர் வாழ்கிறார்கள். பல மாநிலங்களைச் சேர்ந்தோர் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பயின்றுவருகிறார்கள்.
அவரவர்களுக்கு அவரவர் சார்ந்த மொழி சிறந்தது. நம் மொழிதான் சிறந்தது என்ற எண்ணம் கொள்ளக்கூடாது. மாணவப் பருவத்திலேயே பிற மொழிகளை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், பிற மொழிகளை மதிக்கும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். பல மொழிகளின் ஆளுமை மாணவர்களுக்கு இருக்கும்போது சிறந்த எதிர்காலத்தை அடைய முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் வி. முருகையராஜேந்திரன், எம்.எஸ்.ஆர்.கிருஷ்ண பிரசாத், மருத்துவர்கள் விஜி வர்கீஸ், பத்மினி ஆகியோர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தியின் சிறப்புகள் குறித்துப் பேசினர்.
கல்வித் துறை துணை இயக்குநர் ஜி. சுப்ரமணியன், முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி, எஸ்.ஆர்.வி.எஸ். பள்ளி துணை முதல்வர் டி. சுமதி, தலைமையாசிரியர் ஜி. ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com