மேலவாஞ்சூர் அரசுப் பள்ளிக்கு மேஜை, நாற்காலிகள்

மேலவாஞ்சூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு துறைமுக நிர்வாகம் சார்பில் மேஜை, நாற்காலிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மேலவாஞ்சூர் அரசு தொடக்கப்பள்ளிக்கு துறைமுக நிர்வாகம் சார்பில் மேஜை, நாற்காலிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
காரைக்கால் பகுதி வாஞ்சூரில் செயல்பட்டுவரும் காரைக்கால் துறைமுக நிர்வாகம், நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தின்கீழ் துறைமுகத்தைச் சார்ந்திருக்கும் கிராம மக்கள் மேம்பாட்டுக்கு உதவிகளை செய்து வருகிறது. பள்ளிகளுக்குத் தேவையான மேஜை, நாற்காலி, பெஞ்சுகள் போன்றவற்றையும், மாணவர்களுக்கான பிற வசதிகளையும் செய்து வருகிறது.
இதன்படி, மேலவாஞ்சூரில்  எல்கேஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான 230 மாணவ, மாணவியர் பயிலும் ஆங்கில வழி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் வசதிக்காக துறைமுக நிர்வாகம் பள்ளிக்குத் தேவையான நாற்காலிகள், மேஜைகளை திட்டத்தின் மூலம் வாங்கி திங்கள்கிழமை அளித்தது. துறைமுக நிர்வாக பொது மேலாளர் ராஜேஷ்வர்ரெட்டி பள்ளி நிர்வாகத்தினரிடம் இவற்றை ஒப்படைத்தார்.
நிகழ்ச்சியில், துறைமுக அலுவலர் ஜெயக்குமார், கல்வித்துறை வட்ட துணை ஆய்வாளர் கார்த்திகேசன்,  பள்ளி ஆசிரியை ர. அன்புச்செல்வி உள்ளிட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். துறைமுக நிர்வாகத்தினர் உதவிக்கு கல்வித்துறையினர் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com