டெங்கு கொசு ஒழிப்பு: நலவழித்துறையினர் ஆய்வு

டெங்கு கொசுவை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தருவது தொடர்பாக நலவழித்துறையினர் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

டெங்கு கொசுவை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தருவது தொடர்பாக நலவழித்துறையினர் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
காரைக்காலில் 2-ஆவது கட்ட டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இதன்படி நலவழித்துறை துணை இயக்குநர் பி.நாராயணசாமி தலைமையில் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள்,  கிராமப்புற செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து நலவழித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியது : களப்பணியாளர்கள் குழு கொசு புழுக்களைக் கண்டறிந்து அழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
கொசுப்  புழுக்கள் எவ்வாறு உருவாகிறது, மக்கள் எந்தெந்த வகையில் விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுவருகிறது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தினமும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுவருகிறது. 4-ஆம் தேதி முதல் காரைக்கால் நகரப் பகுதியில் கொசுப் புழுக்களை ஒழிக்கும் வகையில் புகை மருந்து அடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி அனைத்து கொம்யூன்களிலும் விரிவுபடுத்தப்படும்.
களப்பணியாளர்கள் குழு தனித்தனியாகப்  பிரிக்கப்பட்டு, காரைக்கால் பகுதி கொம்யூன் வாரியாக வீடு வீடாகச் சென்று கொசுப் புழு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வாக, நீர் தேங்கக்கூடிய தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தும்படி கூறிவருகிறார்கள்.
காய்ச்சலில் உள்ளோரை கண்டறிந்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.
டெங்கு விழிப்புணர்வு முகாம்கள் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, அங்கன்வாடி மையங்களிலும், கிராம சமுதாயக் கூடங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆலோசனையின்படி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சித் துறையின் அனுமதியுடன் மகளிர் சுய உதவிக் குழுவினரையும் இந்தப் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com