காரைக்கால் கடை வீதிகளில் எஸ்.எஸ்.பி. ஆய்வு

அமைச்சர், ஆட்சியரைப் போன்று மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளரும் சைக்கிளில் இரவு நேரத்தில் கடை வீதிகளில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளார்.

அமைச்சர், ஆட்சியரைப் போன்று மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளரும் சைக்கிளில் இரவு நேரத்தில் கடை வீதிகளில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளார்.
 மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன் சைக்கிளில் புதன்கிழமை இரவு நகரின் வணிக நிறுவன கடை வீதிகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். பார்க்கிங் அல்லாத இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகன ஓட்டிகளை அழைத்து அவர் எச்சரித்தார். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோ மற்றும் கார்களை நிறுத்திவிட்டு வணிக நிறுவனங்களுக்கு சென்றோரை அழைத்துப் பேசியதோடு, வாகனங்களை உரிய பார்க்கிங் பகுதியில் நிறுத்துமாறு அறிவுறுத்தினார்.
நகர காவல்நிலையத்துக்கு சென்ற அவர், அங்குள்ள காவலர்களுக்கு பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் பணியில் போலீஸார் மிகுந்த சிரத்தையுடன் செயல்படவேண்டும் என அவர் அறிவுறுத்தினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாதா கோயில் வீதி, காவல் நிலையம், பாரதியார் சாலை, திருநள்ளாறு வீதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வுப் பணியை அவர் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com