தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 3,500 கிலோ பறிமுதல்: நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

காரைக்காலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 3,500 கிலோ  நகராட்சி நிர்வாகத்தால்  பறிமுதல் செய்யப்பட்டது.

காரைக்காலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 3,500 கிலோ  நகராட்சி நிர்வாகத்தால்  பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பிளாஸ்டிக் பொருள் விற்பனை மையங்களில் நகராட்சி ஆணையர் டி.சுதாகர் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர். பல விற்பனையகங்களில் 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் தூக்குப்  பைகள், தட்டு, குவளை போன்றவை  இருந்தது கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.
 இவற்றை மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை பார்வையிட்டு அவற்றை அறையில் வைத்து சீல் வைக்க உத்தரவிட்டார்.    இதுகுறித்து ஆட்சியர் கூறும்போது, கடந்த ஒரு மாத காலமாக 50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள்கள் விற்பது, வாங்குவது, பயன்படுத்துவது கூடாது என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவந்தது. அதையும் மீறி விற்பனை செய்யப்பட்டதால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படும் உறையில் 50 மைக்ரானுக்கு மேல் என பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பைகளை பரிசோதிக்கும்போது 20 மைக்ரான் என்ற அளவில் இருக்கிறது. இதற்கான கருவியை வைத்து பரிசோதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து  மேற்கொள்ளப்படும்.
பெருமளவு கேடு விளைவிக்கும் இந்த வகையிலான பிளாஸ்டிக் உபயோகத்தை மக்கள் நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை, பயன்படுத்துவது தொடர்ந்தால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.1 லட்சம் அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை இதன் மூலம் கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com