ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்: அக். 25 -இல் சூரசம்ஹாரம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ வீரர்களுக்கு காப்பு கட்டி, ஸ்ரீ முருகப்பெருமான் சூரிய, சந்திர பிரபையில் பிரபையில் வீதியுலாவுடன் தொடங்கியது.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் கந்த சஷ்டி விழா நவ வீரர்களுக்கு காப்பு கட்டி, ஸ்ரீ முருகப்பெருமான் சூரிய, சந்திர பிரபையில் பிரபையில் வீதியுலாவுடன் தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர் கோயிலில் கந்த சஷ்டி விழா சுவாமிகள் மற்றும் நவ வீரர்களுக்கு காப்புக் கட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழா தொடக்கமாக காலை 9.30  மணிக்கு நவ வீரர்களுக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சூரிய பிரபையில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இரவு சந்திர பிரபையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சிகளாக சனிக்கிழமை இரவு யானை வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை இரவு சிம்ம வாகனத்திலும், திங்கள்கிழமை இரவு இடும்ப வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை காலை வெண்ணெய்த்தாழி சேவையும், இரவு ரிஷப வாகனத்தில் மின் அலங்கார சப்பரப்படலில் ஸ்ரீ முருகப்பெருமான் வீதியுலா நடைபெறுகிறது. புதன்கிழமை காலை தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும், பகல் 2 மணியளவில் ஸ்ரீ அபிராமி அம்மனிடமிருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தொடர்ந்து 3  மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணியளவில் ஸ்ரீ முருகப்பெருமானை மேஷ வாகனத்தில் எழுந்தருளச் செய்து சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதர் கோயில், ஸ்ரீ சோமநாதர் கோயிலிலும் கந்த சஷ்டி விழா தொடக்கமாக வெள்ளிக்கிழமை காலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக்கோயில்களிலும் 25-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com