தனியார் தொழிற்சாலை முன் பாமக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநள்ளாறு பகுதியில் இயங்கும் டைல்ஸ் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநள்ளாறு பகுதியில் இயங்கும் டைல்ஸ் தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநள்ளாறு பகுதியில் தனியார் டைல்ஸ் கல் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள்  ஊதிய உயர்வு கோரியும், தினக்கூலி ஊழியர்கள் தீபாவளி போனஸ் கோரியும் கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி, தினக்கூலி ஊழியர்கள் 200 பேரை பணி நீக்கம் செய்தும், நிரந்தர ஊழியர்கள் 5 பேரை பணி நீக்கம், 5 பேரை குஜராத்துக்கு பணியிடமாற்றம், 8 பேர் மீது விசாரணை என ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதைக் கண்டித்து ஆலையின் பாமக தொழிற்சங்கத்தினர் ஆலை முன்பாக சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சங்கத்தின் கௌரவத் தலைவரும், மாவட்ட பாமக செயலருமான க. தேவமணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாமக புதுவை மாநில அமைப்பாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கோ.தன்ராஜ், மாநில பாமக தொழிற்சங்கத் தலைவர் ஜெயபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பணி நீக்கம் செய்யப்பட்டோரை மீண்டும் பணியில் அமர்த்தவேண்டும். ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிடவேண்டும். ஊழியருக்கான ஊதியத்தை உயர்த்த வேண்டும். போனஸ் வழங்வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இப்போராட்டத்தைத் தொடர்ந்து ஆலை நிர்வாகத்தினர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் க.தேவமணி கூறும்போது, ஆலையின் உயர்நிலைத் தலைவர்களிடம் இதுகுறித்துத் தெரிவித்து அடுத்த 2 நாள்களில் தகவல் தெரிவிப்பதாக கூறினர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com