பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதை கைவிடவேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்

பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் கைவிடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் கைவிடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில்,  தூய்மை விழிப்புணர்வு வாரந்தோறும் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்படுகிறது.
நிகழ்வாரப் பணியாக மாவட்ட நிர்வாகம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து இணைந்து கிராமப்புறங்களில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் அகற்ற விழிப்புணர்வு மற்றும் தூய்மைப் பணியை, பொன்பேத்தி கிராமம் தொன் போஸ்கோ பள்ளி அருகே உள்ள தெருக்களில் மேற்கொண்டது.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் கலந்துகொண்டு, சாலைகளில் கிடந்த பிளாஸ்டிக் பைகளை அகற்றி பணியை தொடங்கிவைத்தார்.  பின்னர், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்ற ஆட்சியர்,  டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய கொசு உருவாகக் காரணமான தேங்காய் மட்டை, தேவையற்ற பொருள்கள்,  டயர் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்த வேண்டும். வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காத வகையில் கவனமாக இருக்கவேண்டும். பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைக்க மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. இதன் மூலமே கழிவுநீர் தேக்கம் உள்ளிட்ட சுகாதாரக் கேடுகள் உருவாகின்றன. எனவே, மக்கள் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கைவிட முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதிகளில் இருந்த சிறிய உணவகங்களுக்குச் சென்ற ஆட்சியர், பிளாஸ்டிக் பை உள்ளிட்டவை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியதோடு, தண்ணீர் தேங்காத வகையில் பணியாற்றவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மாவட்ட ஆட்சியருடன் பள்ளி மாணவர்களும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, சாலையில் கிடந்த கழிவுப் பொருள்களை அகற்றினர். இவர்களுடன் நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவுப் பணியாளர்களும் சேர்ந்து பணியாற்றினர். உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் மகாலிங்கம், நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com