காவிரி புஷ்கரம் விழா: 3-ஆவது நாளில் பக்தர்கள் புனித நீராடல்

காரைக்கால் மாவட்டம், அகலங்கண்ணு பகுதியில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை நிரவி ஸ்ரீ ஜம்புநாதசுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார்.

காரைக்கால் மாவட்டம், அகலங்கண்ணு பகுதியில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவின் 3-ஆம் நாளான வியாழக்கிழமை நிரவி ஸ்ரீ ஜம்புநாதசுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். இதையொட்டி, திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
காவிரி நீர் பாயக்கூடிய நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜனாறு, பிராவடையனாறு ஆகிய 7 முக்கிய கிளை ஆறுகளைக்கொண்டிருக்கக்கூடிய காரைக்காலில் காவிரி மகா புஷ்கரம் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 12-ஆம் தேதி விழா தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு புனிதநீர் தேக்கத்தில் நீராடினர். 2-ஆம் நாளான புதன்கிழமை காலை முதல் மாலை வரை பக்தர்கள் சொற்ப அளவிலேயே சென்று புனித நீராடினர்.
3-ஆம் நாளான வியாழக்கிழமை நிரவியிலிருந்து ஸ்ரீ ஜம்புநாத சுவாமி தீர்த்தக் கரைக்கு எழுந்தருளினார். இந்நிகழ்ச்சியின்போது, புதுச்சேரி நலத் துறை அமைச்சர் எம். கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பக்தர்கள் பலர் தீர்த்தக் குளத்தில் நீராடினர். சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன. தீர்த்தக் கரைக்கு வந்திருந்த அமைச்சர் கந்தசாமி, தீர்த்தவாரிக்கு அகலங்கண்ணு பகுதியில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பார்வையிட்டார். 12 நாள்களும் பக்தர்கள் வந்து நீராடும் வகையிலும், தினமும் ஒவ்வொரு கோயில்களில் இருந்து சுவாமிகள் தீர்த்தக் கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும் அமைச்சருக்கு, கோயில் நிர்வாக அதிகாரி விளக்கம் அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com