அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பச்சூர் அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பச்சூர் அரசு தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளி அளவிலான இக்கண்காட்சியில் இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தங்கள் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
பள்ளி மூத்த ஆசிரியை எஸ். நிர்மலா தலைமை வகித்தார். பொறுப்பு ஆசிரியை எஸ். செய்யது ஆசியா மரியம் கண்காட்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கல்வித் துறை வட்ட துணை ஆய்வாளர் பொன். சௌந்திரராசு, ஓய்வுபெற்ற நுண்கலை ஆசிரியர் வி. கிருஷ்ணன் மற்றும் தலைமையாசிரியர் தன்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நடுவர் குழுவினர் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். கண்காட்சி நிறைவில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, அதை படைத்திருந்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை கே. ரமா, அலுவலகப் பணியாளர் ஆர். சுலோச்சனா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com