அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் எவ்வித வசதியும் இல்லை: அமைச்சரிடம் மாணவர்கள் புகார்

திருமலைராயன்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் போதிய வசதிகள் இல்லையென அங்கு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம். கந்தசாமியிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

திருமலைராயன்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் போதிய வசதிகள் இல்லையென அங்கு ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எம். கந்தசாமியிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
காரைக்காலுக்கு வியாழக்கிழமை வந்த புதுச்சேரி நலத் துறை மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் எம். கந்தசாமி, திருமலைராயன்பட்டினத்தில் புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை சார்பில் செயல்படும் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, குறைகளை கேட்ட அமைச்சரிடம், மாணவர்கள் தெரிவித்தது:
இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்களுக்கான எந்த வசதியும் இல்லை. குறிப்பாக சீருடை தரப்படவில்லை. பயிற்சிக் காலத்தில் தரப்படவேண்டிய உதவித் தொகை இதுவரை தரவில்லை. கேண்டீன் வசதி இல்லை. கழிப்பறை போதுமான அளவில் இல்லை. பயிற்றுநர்கள் பற்றாக்குறை உள்ளது. புத்தகங்கள் தரப்படவில்லை. இருக்கை வசதி போதுமானதாக இல்லை என அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், அரசின் நிதி நிலை மோசமாக இருப்பதால் சில மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை. விரைவாக அனைத்துப் பிரச்னைகளும் சீர்செய்யப்படும். மாணவர்களின் எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போகாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.
ஆய்வின்போது உடனிருந்த தொழிலாளர் ஆணையர் இ. வல்லவன் செய்தியாளர்களிடம் கூறியது:
மாணவர்கள் தெரிவித்த பிரச்னைகளை உடனடியாக களைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தகம், உதவித் தொகை, சீருடை, ஆய்வக மேம்பாடு போன்றவற்றிற்கு நிதி கோரி அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுபோன்று மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களிலும் பிரச்னை உள்ளது. இவற்றை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com