காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

காரைக்காலில் வரைவு வாக்காளர் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, காரைக்கால் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். துணை ஆட்சியர் (வருவாய்) எஸ்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இப்பட்டியலின் பிரதியை பெற்றுக்கொண்டனர்.
பின்னர், இதுதொடர்பாக தேர்தல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, செப்.15 முதல் அக்.14-ஆம் தேதி வரை வாக்காளர்களுக்கான முகாம் அந்தந்த வாக்குச் சாவடிகளிலும், வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திலும் நடைபெறுகிறது. மேலும் சிறப்பு முகாம் 24.9.2017 மற்றும் 8.10.2017 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2018-இல் வெளியிடப்படும். காரைக்கால் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 71,384 பேரும், பெண் வாக்காளர்கள் 81,747 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 17 பேரும் என மொத்தம் 1,53,148 பேர் உள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மற்றும் முகவரியை சரிபார்த்துக்கொள்ளலாம். திருத்தம் இருப்பின் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து, வாக்குச் சாவடி நிலை அதிகாரி மற்றும் நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்கலாம். 1.1.2018 அன்று 18 வயது பூர்த்தியாகவுள்ளோர், புதிய வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள உரிய படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com