பள்ளி, கல்லூரிகளில் கை கழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் பள்ளி, கல்லூரிகளில் கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

 காரைக்கால் பள்ளி, கல்லூரிகளில் கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மை சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சி இருவார காலம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து கல்லூரிகள், பள்ளிகளில் கை கழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ் பார்வையிட்டார்.
வ.உ.சி. பள்ளி மாணவ, மாணவியரிடையே அவர் பேசும்போது, நமது கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க பழகிக்கொள்ளவேண்டும். கைகளை தண்ணீரில் கழுவிய பின்னரே சாப்பிடவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதுகுறித்து மாணவர்கள் தங்கள் குடும்பத்தினரும் எடுத்துக்கூற வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் அண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் குணசேகரன், நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி, கல்வித்துறை துணை இயக்குநர் ஜி.சுப்ரமணியன், வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் ஜெயா, கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com