புதிய வரலாறு படைக்கும் வகையில் என்.ஆர்.காங்கிரஸ் உண்ணாவிரதம் அமையும்: பொதுச்செயலர் பாலன் கருத்து

காவிரி விவகாரத்தில் புதிய வரலாறு படைக்கும் விதமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் அமையும் என அக்கட்சி பொதுச்செயலர் தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில் புதிய வரலாறு படைக்கும் விதமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதப் போராட்டம் அமையும் என அக்கட்சி பொதுச்செயலர் தெரிவித்தார்.
அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலர் பாலன், புதுச்சேரி பகுதி சட்டப் பேரவை உறுப்பினர் என்.ஜெ.ஜெயபால் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காரைக்கால் வந்தனர். காரைக்கால் பகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.என்.திருமுருகன், சந்திரபிரியங்கா  ஆகியோருடன் புதன்கிழமை நடக்கவுள்ள உண்ணாவிரதப் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பாலன் கூறியது : 
காரைக்காலில் மூன்று போகம் விளைச்சல் கண்ட நிலையானது, கடந்த 50 ஆண்டுகளாக காவிரியை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் போராட்டங்களால் விளைச்சல் வீதம் குறைந்துவிட்டது. இந்த தருணத்தில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. இது விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கக்கூடியதாகும். காவிரி மேலாண்மை வாரியம் அவசியம் என்பதை அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி கடந்த வாரம் கோரிக்கை விடுத்தார். இதனை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது தொடர்பாக மாநில அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கும் விதமாகவும் காரைக்கால் கோயில்பத்து பகுதியில் புதன்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதில் என்.ரங்கசாமி மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொள்வர். இந்த போராட்டம், புதிய வரலாறு படைப்பது நிச்சயம். இந்த கோரிக்கையானது மத்திய அரசுக்கு தரும் அழுத்தமாகவே இருக்கும். அனைத்துத் தரப்பினரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com