காரைக்கால் கராத்தே  வீரருக்குப் பரிசு

மும்பையில் நடைபெற்ற சர்வதேச குபுடோ, கராத்தே செமினாரில் பங்கேற்ற காரைக்கால் கராத்தே வீரருக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது.

மும்பையில் நடைபெற்ற சர்வதேச குபுடோ, கராத்தே செமினாரில் பங்கேற்ற காரைக்கால் கராத்தே வீரருக்கு சிறப்புப் பரிசு கிடைத்தது.
உலகளாவிய அளவில் கராத்தே, குபுடோ உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலையில் அவ்வப்போது மேம்படுத்தப்படும் திறன்கள் குறித்து விளக்கும் செமினார் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இத்துறையில் சிறந்துவிளங்குவோர் கூட்டமைப்பு இதனை நடத்துகிறது. நிகழாண்டு கடந்த 10 முதல் 12-ஆம் தேதி வரை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சி செமினாரில் பல்வேறு  பகுதிகளில் இருந்து சுமார் 100 மாஸ்டர்கள் பங்கேற்றனர். காரைக்கால் வி.ஆர்.எஸ்.மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமி நிறுவனர் மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமார் புதுச்சேரி மாநிலத்திலிருந்து கலந்துகொண்டார்.
இதில் அமெரிக்க காவலர்கள் பயன்பாட்டில் இருக்கும் குச்சி (டோன்ஃபோ), சூலம் வடிவிலான ஆயுதம் (சாய்போ), வாள் (சாம்ராய்) மற்றும் கட்டா பயிற்சியில் காரைக்கால் வி.ஆர்.எஸ்.குமார் சிறந்து விளங்கியமைக்காக, தலைமை பயிற்சியாளராக கலந்துகொண்ட கோஜூரியு, அமெரிக்க மாஸ்டர் ராய் ஜெர்ரி ஹோப்ஸ், ஜப்பான் மாஸ்டர் ஹிஹாஷி டகுமா ஆகியோர் சிறப்புப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினர்.
காரைக்கால் மாவட்டம் மட்டுமல்லாத பிற மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் தம்மிடம் பயிற்சி பெறுவதாகவும், மும்பையில் நடந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி மாணவர்களுக்கு நல்ல பயனைத் தரும் என வி.ஆர்.எஸ்.குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com