தூய தேற்றரவு அன்னை மின் அலங்கார தேர் பவனி

காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவாக புதன்கிழமை இரவு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. 

காரைக்காலில் புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவாக புதன்கிழமை இரவு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. 
பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலயமாக காரைக்காலில் உள்ள புனித தேற்றரவு அன்னை தேவாலயம் விளங்குகிறது. 
இந்த ஆலயத்தில் 10 நாள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா கடந்த 6-ஆம் தேதி  மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.   இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தினமும் காலை திருப்பலியும் மாலை செப வழிபாடும், சிறிய தேர் பவனியும் நடத்தப்பட்டு வந்தது. 10-ஆம் நாளான 15-ஆம் தேதி புதன்கிழமை காலை  திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் பெருவிழா திருப்பலி, ஊட்டியை சேர்ந்த புனித பத்தாம்பத்திநாதர் இளம் குருமடம் அருட்தந்தை எஃப்.ஜோசப் பெர்ணாண்டஸ் பெலிக்ஸ் தலைமையில் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் சமாதானக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  இதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புனித தேற்றரவு அன்னை சொரூபம் ஆலயத்தை சுற்றிவந்து மின் அலங்கார தேரில் வைக்கப்பட்டது. ஆலய  வாயிலில் இருந்து  மின் அலங்கார தேர் பவனி முக்கிய வீதிகளுக்கு சென்று ஆலயத்தை சென்றடைந்தது.  இறை புகழை பரப்பியவாறு தேர் பவனியில் கலந்துகொண்டோர் சென்றனர்.  வியாழக்கிழமை காலை திருப்பலி நடத்தப்பட்டு, கொடியிறக்கம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com