காரைக்காலில் தற்காப்புக் கலை போட்டி

காரைக்காலில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவினாம் தற்காப்புக் கலை போட்டி நிறைவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

காரைக்காலில் நடைபெற்ற மாநில அளவிலான ஓவினாம் தற்காப்புக் கலை போட்டி நிறைவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி ஓவினாம் தற்காப்புக் கலை சங்கத்தின் சார்பில் 6-ஆவது மாநில அளவிலான ஓவினாம் போட்டி, காரைக்கால் உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக போட்டியை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தொடங்கிவைத்தார். 
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியிலிருந்து சுமார் 500 மாணவ, மாணவியர் போட்டியில் பங்கேற்றனர். 
பல்வேறு வயது பிரிவினர் இப்போட்டியில் பங்கேற்றனர். 35 தங்கப் பதக்கங்களை மாஸ்டர் எம்.செண்பகவல்லி அணியினர் முதல் பரிசு பெற்றனர். இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 26 தங்கப் பதக்கங்களை மாஸ்டர் ஆர்.சரஸ்வதி அணியினர் 2-ஆம் நிலைக்கு வந்தனர். இவர்களுக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 18 தங்கப் பதக்கங்களை மாஸ்டர் ராமச்சந்திரன் அணியினர் பெற்றனர். இவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 
இந்தப் பரிசுகள் யோகாசனா ஐரோம் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பில் வழங்கப்பட்டது.
போட்டி பரிசளிப்பு நிகழ்வின்போது, தற்காப்புக் கலைகளின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாஸ்டர் எஸ்.ஏ.நாவலன், எஸ்.ரமேஷ், கண்ணன், சீதாலட்சுமி, சண்முகசுந்தரம் ஆகியோர் கலைவேந்தன் என்ற பட்டமும், ரொக்கப் பரிசும் ஓவினாம் தற்காப்புக் கலை சங்கம் வழங்கி கௌரவித்தது.
திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன், காரைக்கால் கேசவசாமி, பாரீஸ்ரவி, பிரைட் அகாதெமி பள்ளி முதல்வர் மோகன வித்யாவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு போட்டி ஏற்பாட்டாளர்களைப் பாராட்டி, பரிசுகள் பெற்றவர்களை வாழ்த்திப் பேசினர். ஓவினாம் என்ற தற்காப்புக் கலை மீது மாணவர்கள் ஆர்வம் பெருகியிருப்பது வரவேற்கக்கூடியது என அவர்கள் கூறினர்.
போட்டி ஏற்பாடுகளை மாஸ்டர் எம்.செண்பகவல்லி, ஆர்.சரஸ்வதி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com