என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி

காரைக்காலில் பள்ளி, கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

காரைக்காலில் பள்ளி, கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளில் தேசிய மாணவர் படையினருக்கு ராணுவத்தின் அடிப்படை நிலையிலான பயிற்சி, சமூக சேவையில் ஈடுபடுதல், தேசப்பற்று வளர்ப்பு உள்ளிட்டவை ராணுவ பயிற்றுநர்களாலும், பள்ளியின் என்.சி.சி. அலுவலர்களாலும் அளிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் என்.சி.சி. 10 நாள் சிறப்பு முகாமில் பலகட்ட பயிற்சியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளின் என்.சி.சி. மாணவர்கள் சுமார் 500 பேருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை கூடுதலாக அளிக்க காரைக்கால் என்.சி.சி. கமாண்டன்ட் சி.எஸ்.சர்மா அனுமதி அளித்தார்.
இதனடிப்படையில் என்.சி.சி. நிர்வாகத்துக்குள்பட்ட துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்துக்கு மாணவர்கள் திங்கள்கிழமை முதல் அழைத்துச் செல்லப்படு
கின்றனர். 
இங்கு ராணுவப் பயிற்றுநர்களால் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் 3 நாள்கள் வரை இந்த பயிற்சி தரப்படும் என என்.சி.சி. வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. என்.சி.சி.யில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி பெறுதல் முக்கிய அம்சம் என்பதால், இதில் சிறப்பு கவனம்  செலுத்தப்படுவதாக என்.சி.சி. வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com