குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வணிகர்களுக்கு அறிவுறுத்தல்

குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் உரிய முறையை கையாளும்படி வணிகர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் உரிய முறையை கையாளும்படி வணிகர்களுக்கு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் நகராட்சி ஆணையர் எஸ். சுபாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்துவரும் வணிகர்கள், தங்கள் கடைகளில் மக்கும் குப்பை (பச்சை), மக்காத குப்பை ( நீலம்) என இரண்டு வகையான குப்பைக் கூடைகளை வைத்து குப்பைகளை பிரித்து, குப்பை சேகரிக்க வருவோரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் கடை உரிமையாளர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-இன்படி அபராதம் விதிக்கப்படும். மேலும், வணிகர்கள் பொது இடங்கள், கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகள் போடுவதைக் கண்டால் அல்லது உறுதி செய்யப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும், நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 51 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த 2017-ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி உபயோகப்படுத்தப்பட்டால் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளின்படி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com