ஊதியம் தராத அரசைக் கண்டித்து பாப்ஸ்கோ ஊழியர்கள் மொட்டை அடித்துப் போராட்டம்

பணி செய்த 13 மாதங்களுக்குரிய ஊதியத்தை வழங்காத அரசைக் கண்டிக்கும் வகையில், பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் மொட்டை அடித்துக்கொண்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி செய்த 13 மாதங்களுக்குரிய ஊதியத்தை வழங்காத அரசைக் கண்டிக்கும் வகையில், பாப்ஸ்கோ நிறுவன ஊழியர்கள் மொட்டை அடித்துக்கொண்டு புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசு நிறுவனமான பாப்ஸ்கோ மூலம் ரேஷன் கடைகள், மதுபானக் கடைகள் நடத்துதல், பள்ளிகளுக்கு மளிகை, காய்கறி அனுப்பிவைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. காரைக்காலில் பணியாற்றும் நிரந்தர, தினக்கூலி ஊழியர்கள் 60 பேருக்கும், கடந்த 13 மாதங்களாக ஊதிய நிலுவை இருக்கிறது இதை வழங்க வேண்டும். மேலும் 15 ஆண்டுகளாக பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். பாப்ஸ்கோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநரை பணியிடமாற்றம் செய்யவேண்டும். இந்த நிறுவனத்தை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். அலுவலரை நியமிக்கவேண்டும். 
பாப்ஸ்கோ நிறுவனத்தில் தினமும் ரூ.150 ஊதியமாகப் பெற்றுக்கொண்டு பணியாற்றுவோருக்கு, மற்ற துறைகளில் வழங்கப்படுவதுபோல் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யவேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இ.எஸ்.ஐ., இ.பி.எஃப்., எல்.ஐ.சி. ஆகிய தொகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் உடனடியாக செலுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசு இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, காரைக்கால் பாப்ஸ்கோ ஊழியர்களில் மூவர் மொட்டை அடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சங்கத் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் தலைமையில்  சக ஊழியர்கள் கலந்துகொண்டு, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
சங்கத் தலைவர் கூறும்போது, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காரைக்கால் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என்றார்.
                                      
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com