நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் தொடங்கியது: மார்ச் 1-இல் தீர்த்தவாரி

காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் 14 நாள்கள் நடைபெறக் கூடிய பிரமோத்ஸவ தொடக்கத்துக்கான கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிக் கம்பம் அருகே எழுந்தருளினார். கொடியேற்றத்தையொட்டி, கம்பத்துக்கு சிறப்புத் திருமஞ்சனம், ஆராதனை நடத்தப்பட்டு, கருடக் கொடியேற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முதல் நாள் நிகழ்ச்சியாக மாலை சூரிய பிரபையில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. 2-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை மாலை சந்திர பிரபையில், 3-ஆம் நாள் புதன்கிழமை சேஷ வாகனத்தில், 4-ஆம் நாள் வியாழக்கிழமை கருட வாகனத்தில், 5-ஆம் நாள் வெள்ளிக்கிழமை ஹனுமந்த வாகனத்தில், 6-ஆம் நாள் சனிக்கிழமை சிம்ம வாகனத்தில் பெருமாள் வீதியுலா புறப்பாடு செய்யப்படுகிறது.
7-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை திருமஞ்சனம், மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இரவு 10 மணியளவில் ருத்ர வேடத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். 8-ஆம் நாளி பிப்(26) மாலை குதிரை வாகனத்தில் வீதியுலாவும், 9-ஆம் நாள் (பிப்.27), திருத்தேரில் வீதியுலா மற்றும் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 10-ஆம் நாள் (பிப்.28) மூலவர், உத்ஸவர் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 11-ஆம் நாள் மார்ச் 1-ஆம் தேதி திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாளுடன் சேர்ந்து திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாசி மகத் தீர்த்தவாரி நடைபெறுகிறது. 12-ஆம் நாள் (மார்ச்.2) பெருமாள் மாடவளாகப் புறப்பாடு நடைபெறுகிறது. மார்ச் 3-ஆம் தேதி 13-ஆம் நாள் தெப்ப உத்ஸவமும், 14-ஆம் நாள் விடையாற்றியையொட்டி புஷ்பப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. உத்ஸவத்தையொட்டி நாள்தோறும் யாகசாலை, திவ்யப்பிரபந்த சேவையும் நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீகைலாசநாதர் - ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயில் அறங்காவல் குழுவினர், ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் பக்தஜன சபாவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com