வேளாண் அறிவியல் நிலையத்தில் ரூ.72 லட்சத்தில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் கோழி, மாடு பண்ணை மற்றும் பயிற்சிக் கூடம் ரூ.72 லட்சத்தில் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் கோழி, மாடு பண்ணை மற்றும் பயிற்சிக் கூடம் ரூ.72 லட்சத்தில் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
திருநள்ளாறு பகுதி மாதூரில் செயல்படும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் மத்திய அரசின் திட்டமான ஆர்.கே.வி.ஓய். மூலம் ரூ.72 லட்சத்தில் கோழிப்பண்ணை, மாட்டுப் பண்ணை, பயிற்சிக் கூடம் கட்டுவதற்கான தொடக்கப் பணிகள் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார்.
கோழிப் பண்ணை, மாட்டுப் பண்ணை ஆகியவை நிலையத்தில் இல்லாத நிலையில், புதிதாக கட்டுமானம் செய்யப்படுகிறது. கோழிப்பண்ணை மூலம் குஞ்சு பொறிப்பு, கோழி வளர்ப்பு முறையும், மாட்டுப் பண்ணையில் கன்று வளர்ப்பு, பால் உற்பத்தி, பால் உபபொருள்கள் உற்பத்தி செய்தல் நடைபெறும். கோழிப் பண்ணை ரூ.16.43 லட்சத்திலும், மாட்டுப் பண்ணை வளாகம் ரூ.10.70 லட்சம் செலவிலும் கட்டப்படுகிறது.
மேலும் விவசாயிகள், மகளிர், தொழில் ஆர்வலர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.44.82 லட்சம் செலவில் பயிற்சிக் கூடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர், இவற்றை 3 மாத காலத்திற்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அபிவிருத்தி ஆணையர் அ.அன்பரசு, மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா, கூடுதல் வேளாண் இயக்குநர் கா.மதியழகன், நகராட்சி ஆணையர் டி.சுதாகர், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com