அரசு உதவிப்பெறும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக 28 முதல் தொடர் போராட்டம்: பெற்றோர் சங்கம் முடிவு

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அமல் செய்ய வலியுறுத்தி, பிப்.28 முதல் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரை அமல் செய்ய வலியுறுத்தி, பிப்.28 முதல் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் அ.வின்சென்ட் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
அரசுப் பள்ளி ஆசிரியர்களைப்போன்று அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை புதுச்சேரி அரசு அமல்படுத்தவேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 37-க்கும் மேற்பட்ட அரசு உதவிப் பெறும் பள்ளிகளை  அரசுத் திட்டத்தில் சேர்க்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்வதை கைவிட்டு, திட்டத்தில் பயனடையும் வகையில் அவர்களை சேர்க்கவேண்டும்.
ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனடியாக வழங்குவதோடு, ஒவ்வொரு மாதமும் அரசுத்துறையினருக்கு வழங்கப்படும் காலத்திலேயே ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து சலுகைகளும் குறிப்பாக இலவச சைக்கிள், குடை, காலணி, வழிகாட்டல் புத்தகமான சிகரத்தை நோக்கி உள்ளிட்டவற்றை, அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தவேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் பங்கேற்புடன் பிப். 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டமும், அரசு இதன் மீது கவனம் செலுத்தத் தவறினால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் கையெழுத்து இயக்கமும், மார்ச் 2-ஆவது வாரத்தில் மறியல் போராட்டமும், அதைத் தொடர்ந்து அனைத்து ஜனநாயக அமைப்பினரிடம் கலந்துபேசி பந்த் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் சங்கச் செயலர் கே.மணவாளன், பொருளாளர் எம்.குணசேகரன், மக்கள் தொடர்பு அலுவலர் ஐ.அப்துல் ரஹீம் மற்றும் ஆலோசகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com