திருமலைராயன்பட்டினம்  ஜடாயுபுரீசுவரர் கோயில் மாசி மக பிரமோத்ஸவ கொடியேற்றம்

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் மாசி மக பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் மாசி மக பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திருமலைராயன்பட்டினம் பகுதியில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீசுவரர் கோயில் உள்ளது. வருடாந்திர மாசி மக பிரமோத்ஸவம் 12 நாள் நிகழ்ச்சியாக  நடைபெறுகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியாக, செவ்வாய்க்கிழமை காலை ரிஷபக் கொடி வீதியுலா கொண்டு செல்லப்பட்டு 11 மணியளவில் கொடியேற்றம் செய்யப்பட்டது. கொடிக்கம்பம் அருகே சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகர் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீற்றிருந்தனர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
உத்ஸவத்தின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக 21-ஆம் தேதி  மாலை சூரிய பிரபையில் சுவாமி அம்பாள் வீதியுலாவும், 22-ஆம் தேதி சந்திர பிரபையிலும், 23-ஆம் தேதி இரவு பூத வாகனத்திலும், 24-ஆம் தேதி  இரவு ஸ்ரீ தியாகராஜர் புறப்பாடு, வஸந்த உத்ஸவம் நடைபெறுகிறது. 25-ஆம் தேதி  இரவு சேஷ வாகனத்திலும், 26-ஆம் தேதி  இரவு ரிஷப வாகனத்தில் மின்சார சப்பரப்படல் வீதியுலா நடைபெறுகிறது. 27-ஆம் தேதி இரவு கைலாச வாகனத்திலும்,  28-ஆம் தேதி காலை தேரோட்டம், இரவு காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஜடாயு ராவண யுத்தம் (சம்ஹாரம்) நடைபெறவுள்ளது.
நிறைவு நிகழ்ச்சிகளாக மார்ச் 1-ஆம் தேதி காலை ஸ்ரீ நடராஜர் தீர்த்தவாரி தொடர்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு  இரவு புஷ்பப் பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. 2-ஆம் தேதி இரவு சண்டிகேசுவரர் உத்ஸவமும், 3-ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், விடையாற்றியுடன் நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ஏ.வீரச்செல்வம் செய்துள்ளார். 
விமரிசையான திருவிழா : வரும் 28-ஆம் தேதி புதன்கிழமை இரவு நடைபெறக்கூடிய ஜடாயு ராவண சம்ஹார நிகழ்ச்சி, இதிகாசத்தின் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறக்கூடியதாகும். இதைக் காணும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், பாதுகாப்பு ஏற்பாடுகளை 
காவல்துறையினரும் மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com