திருநள்ளாறு கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அடுத்த வாரம் நிறைவடையும்:  கோயில் அலுவலர் தகவல்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அடுத்த வாரம் நிறைவடையும் என கோயில் அலுவலர் தெரிவித்தார்.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அடுத்த வாரம் நிறைவடையும் என கோயில் அலுவலர் தெரிவித்தார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் கடந்த ஆண்டு டிச.19-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழா நாளில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து 45 நாள்கள் வரை சனிக்கிழமையில் மட்டும் சனிப்பெயர்ச்சிக்கு நிகரான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். 
சனீஸ்வரபகவான் சன்னிதி மற்றும் கோயிலில் பிற பகுதிகள், நளன் குளம் அருகில் உள்ள ஸ்ரீ நளன் கலிதீர்த்த விநாயகர் கோயில் உள்பட சுமார் 15  இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. சனிப்பெயர்ச்சி விழா முடிந்ததும் இவை பலத்த பாதுகாப்புடன், உண்டியலை பிரித்து காணிக்கை எடுத்து மூட்டை கட்டி பத்திரப்படுத்திவைக்கப்பட்டது. 
தொடர்ந்து பக்தர்கள் கோயிலுக்கு அதிகமானோர் தரிசனம் செய்ய வந்த நிலையில் மீண்டும் உண்டியல்கள் நிரம்பியதையொட்டி, காணிக்கைகள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன.
கோயில் வெளி பிராகார மண்டபத்தில் கடந்த 19-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி தொடங்கியது.
இந்தப் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் என சுமார் 50 பேர் ஈடுபட்டுள்ளனர். தினமும் இந்தப் பணி நடைபெறாமல், இடைவெளி விட்டு எண்ணப்படுகிறது. இதையொட்டி காணிக்கை எண்ணும் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது. 
இதுகுறித்து கோயில் நிர்வாக அலுவலர் ஏ.விக்ராந்த் ராஜா வெள்ளிக்கிழமை கூறும்போது, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அடுத்த வாரம் புதன்கிழமைக்குள் பணிகள் நிறைவுபெற்றுவிடும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com