பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

கிராம மக்களுடன் காரைக்கால் குட்ஷெப்பெர்டு பள்ளி நிர்வாகத்தினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, கிராமத்தினருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினர்.

கிராம மக்களுடன் காரைக்கால் குட்ஷெப்பெர்டு பள்ளி நிர்வாகத்தினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு, கிராமத்தினருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினர்.
காரைக்கால் பகுதி மேலகாசாக்குடியில் இயங்கிவரும் இப்பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி அருகே உள்ள காஞ்சிபுரம் கோயில்பத்து கிராமத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
பள்ளி மாணவர்களும், கிராமத்தினரும் பொங்கல் விழாவின் சிறப்புகள் குறித்துப் பேசினர். மாணவர்களும், கிராமத்தினரும் பங்கேற்ற பல்வேறு விளையயாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கென கோலப் போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டது.
பொங்கல் விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ரான்சன் தாமஸ், முதல்வர் ஜாய்தாமஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் வேட்டி அணிந்தும், மாணவியர், ஆசிரியைகள் சேலை மற்றும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்துவந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com