புதுவையின் முதலாவது முதல்வர் பக்கிரிசாமிப்பிள்ளை சிலைக்கு மரியாதை

புதுச்சேரியின் முதலாவது முதல்வர் என்ற பெருமையுடைய பக்கிரிசாமிப்பிள்ளை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரியின் முதலாவது முதல்வர் என்ற பெருமையுடைய பக்கிரிசாமிப்பிள்ளை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு சனிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
பிரெஞ்சு விடுதலைக்குப் பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேச முதலாவது முதலமைச்சர் என்ற பெருமையுடையவர் காரைக்காலை சேர்ந்த ஏ.எஸ்.பக்கிரிசாமிப்பிள்ளை. 1963-ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட புதுச்சேரி யூனியன் பிரதேச பாதுகாப்பு சபையின் தலைவராக (முதல்வர்) ஏ.எஸ்.பக்கிரிசாமி இருந்தார். இதனால் இவர் புதுச்சேரி மாநில முதல் முதல்வர் என்று அழைக்கப்படுகிறார். காரைக்கால் நகராட்சி திருமண மண்டபத்தில் வெளி வளாகத்தில் ஏ.எஸ்.பக்கிரிசாமிப்பிள்ளையின் முழு உருவச் சிலை உள்ளது. இவரது பிறந்தநாள், நினைவுநாளின்போது பல்வேறு தரப்பினர் சிலைக்கு மரியாதை செய்கின்றனர்.
பக்கிரிசாமிப்பிள்ளையின் 62-ஆவது நினைவு நாளையொட்டி சனிக்கிழமை திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காரைக்கால் மாவட்ட சோழிய வேளாளர் சங்கம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத் தலைவர் பி.எஸ்.ஆர்.சின்னையன், பொதுச்செயலர் அமுதா ஆர்.ஆறுமுகம், பொருளாளர் கருணாநிதி மற்றும் தலைமையாசிரியர் (ஓய்வு) சிவசண்முகவடிவேலு, பார்வதீசுவரன், ஆசிரியர் ஆர்.காளிதாசன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com