பள்ளி, கல்லூரி வாகனங்கள் சோதனை

காரைக்காலில் பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்துத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை சோதனை செய்யும் பணியை தொடங்கினர்.

காரைக்காலில் பள்ளி, கல்லூரி வாகனங்களை போக்குவரத்துத் துறை அலுவலர்கள் திங்கள்கிழமை சோதனை செய்யும் பணியை தொடங்கினர்.
காரைக்காலில் விடுமுறை முடிந்து கடந்த 4 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. வழக்கமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை காலத்தில் இருக்கும்போதே, போக்குவரத்துத் துறையினரால் மாணவர்கள் செல்லும் வாகனங்கள் சோதனைக்குள்ளாக்கப்படுவது வழக்கம்.
நிகழாண்டு பள்ளிகள் திறக்கும் தருணம் வரை செய்யப்படவில்லை. மாணவர்கள் நலன் கருதி போக்குவரத்துத் துறையினர் சோதனைப் பணியைச் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். 
இந்நிலையில், காரைக்கால் போக்குவரத்துத் துறையினர் திங்கள்கிழமை சோதனைப் பணியைத் தொடங்கினர். 3 நாள்கள் சோதனைத் திட்டத்தில் குறிப்பிட்ட பள்ளி வாகனங்கள் முதல்நாளில் வரவழைக்கப்பட்டன. போக்குவரத்து துணை ஆய்வாளர் கல்விமாறன், குமரேசன் ஆகியோர் இந்த பணியில் ஈடுபட்டனர். இதில் புதுச்சேரி அரசு சார்பில், சலுகை கட்டணத்தில் இயக்கப்பட்டு வரும்  மாணவர் சிறப்புப் பேருந்துகள் உள்பட அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 180 வாகனங்கள் சோனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. முதல்நாளில்  68 வாகனங்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. வாகனங்களில் மாணவர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் இருக்கை வசதிகள், அவசர கால திறப்பு கதவுகள், முதலுதவிப் பெட்டிகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என்பதை குழுவினர் ஆய்வு செய்தனர். 
அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு வாகனங்கள் இருக்க வேண்டுமென்று, கல்வி நிறுவனங்களுக்கும், வாகனங்களை இயக்குவோருக்கும் அறிவுறுத்தப்பட்டது. செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டும், மது அருந்திவிட்டும் வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும், வாகனத்துக்குரிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கப்பட்டன.
முதல்நாளில் 20 வாகனங்கள் ஆய்வில் திருப்தியில்லாதால் அவற்றை சரிசெய்து வரும்படி அனுப்பப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com