மண்பாண்ட உற்பத்தி தொழில் மேம்பட அரசு உதவி செய்யவேண்டும்: அமைச்சரிடம் வலியுறுத்தல்

காரைக்காலில் மண்பாண்ட உற்பத்தித் தொழில் மேம்படுவதற்கு புதுச்சேரி அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் மண்பாண்ட உற்பத்தித் தொழில் மேம்படுவதற்கு புதுச்சேரி அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து செயல்படுத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் நல்வாழ்வு  அமைப்புத் தலைவர் ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் காரைக்காலில் உள்ள அமைச்சர் முகாம் அலுவலகத்தில்  புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனை திங்கள்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பது : காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 300 மண்பாண்டத் தொழில் செய்யும் குடும்பத்தினர்  உள்ளனர். தொழிலுக்கு ஏற்ப அரசு உதவிகள் கிடைப்பதில்லை. இந்த தொழில் செய்துவரும் எங்களது வாழ்வாதாரம் பல நிலைகளில் பாதித்துள்ளது. மழைக் காலங்களில் இத் தொழில் முடங்கிவிடுகிறது. தொழில் செய்வதற்கான மூலப்பொருள்களான களிமண், எரிபொருள் கிடைப்பதும் அரிதாக இருக்கிறது. கிடைக்கும் சூழலில் விலை அதிகப்பட்சமாக இருக்கிறது.
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கான உபகரணங்களும் கடந்த 10 ஆண்டு காலமாக அரசு வழங்கவில்லை. உற்பத்தியாளர்களுக்கு உரிய சாதனத்தை அரசு வழங்காமல் போனால், வருமாண்டுகளில் இந்த தொழில் மிகவும் நலிந்துபோய்விடும். இந்த தொழிலை நம்பியுள்ள குடும்பத்தினரின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே,  மண்பாண்ட உற்பத்தித் தொழில் மேம்படவும், உற்பத்தியாளர் நலனையும் கருத்தில்கொண்டு உரிய உதவிகள் செய்யவும், சிறப்புத் திட்டங்கள் வகுத்து அமல்படுத்தவும் புதுச்சேரி அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com