பள்ளிகளில் குழந்தைகள் தின கொண்டாட்டம்

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள்  தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள்  தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
காரைக்கால் தருமபுரத்தில் செயல்படும் எஸ்.ஆர்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் கந்தசாமி தலைமை வகித்தார். பள்ளி துணை முதல்வர் தே. சுமதி, தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் குழந்தைகள் தினத்தின் நோக்கம் குறித்து மாணவர்களிடையே பேசினர்.
மாணவர்கள் பலர் நேரு, காந்தி, பாரதி போன்ற தலைவர்களைப் போல் வேஷமிட்டு வந்து பேசினர். மேலும், மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி, நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் ஏ. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். அக்கரைவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ். சுரேஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். ஆசிரியர் ஏ. இம்மானுவேல் வரவேற்றார். ஆசிரியர் டி. அகிலாண்டேஸ்வரி நன்றி கூறினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. நெடுங்காடு ஜவாஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் துணை முதல்வர் கனகராஜ் தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வடிவாம்பாள், சமுதாய நலப்பணித் திட்ட அலுவலர் மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
காரைக்கால் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் கோட்டுச்சேரி கலைவாணி கலைக்குழு இணைந்து, நேரு யுவகேந்திரா உதய தினம் மற்றும் குழந்தைகள் தினம் புளியங்கொட்டை சாலையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொண்டாடின. கலைக்குழுச் செயலர் மாலதி தலைமை வகித்தார். தலைமையாசிரியர் புனிதா, நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரத், மாவட்ட நுகர்வோர் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பாரீஸ்ரவி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் பொறுப்பாசிரியர் எஸ்.திருஞானசம்பந்தம் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் ஆர். விஜயன் உள்ளிட்டோர் ஆசிரியர், குழந்தைகள் தினத்தின் பெருமைகள் குறித்துப் பேசினர். நிகழ்ச்சியின் நிறைவில், மாணவர்களின் நாடகம், நடனம், வில்லுப்பாட்டு உள்ளிட்டவை நடைபெற்றன. ஆசிரியர் ஆர். ரவிக்குமார் வரவேற்றார். ஆசிரியை விஜயா நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com