பொதுமக்களுக்கு மின்துறையினர்  வேண்டுகோள்...

புயல், மழை காரணமாக பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என மின்துறை நிர்வாகம் அறிவுறுத்தல்களை செய்துள்ளது.

புயல், மழை காரணமாக பொதுமக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என மின்துறை நிர்வாகம் அறிவுறுத்தல்களை செய்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : புயல் மற்றும் மழை காரணமாக பொதுமக்கள் மின்மாற்றி, மின்கம்பம் மற்றும் மின் பாதை இடங்களில் நிற்க வேண்டாம்.
தாங்கள் இருக்கும் இடங்கள் அருகே மின் கம்பங்கள் சாயும் தருவாயிலும், மின் வயர்கள் அறுந்து கிடந்தாலும் அதை தொடாமல், அருகில் உள்ள மின்துறை நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மின் விநியோக பெட்டிகளை தொடக் கூடாது. காற்று பலமாக வீசும்போது மின் சாதனப் பொருள்களையும், செல்லிடப்பேசி பயன்பாட்டையும் தவிர்க்குமாறும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மின் கம்பம், மின் மாற்றி மற்றும் மின் பாதை செல்லுமிடங்கள் அருகே அனுப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மின்துறையின் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண் - 04368-222694, பிள்ளைத்தெருவாசல் நிலையம் -04368-220711, சுரக்குடி நிலையம் - 04368 - 261246. பொதுமக்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான எந்தவொரு தகவலையும் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com