அடுத்த 4 ஆண்டுகளில் முழுமையான கட்டமைப்புடன் காரைக்கால் என்.ஐ.டி. உருவெடுக்கும்:  இயக்குநர் கே.சங்கரநாராயணசாமி தகவல்

அடுத்த 4 ஆண்டுகளில் முழுமையான கட்டமைப்புகளுடன் காரைக்கால் என்.ஐ.டி. உருவெடுக்கும் எனவும், தேசிய  அளவிலான

அடுத்த 4 ஆண்டுகளில் முழுமையான கட்டமைப்புகளுடன் காரைக்கால் என்.ஐ.டி. உருவெடுக்கும் எனவும், தேசிய  அளவிலான கல்வி நிறுவன தர வரிசையில் இந்த என்.ஐ.டி. முன்னேற்றத்தை நோக்கி பயணிப்பதாக இயக்குநர் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குடியில் இயங்கிவரும் புதுச்சேரி என்.ஐ.டி. இயக்குநர் கே.சங்கரநாராயணசாமி செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது :
நிகழாண்டு நிறுவனத்தின் 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் 119 மாணவ, மாணவியர் பட்டம் பெறுகின்றனர். காரைக்காலில் இயங்கிவரும் என்.ஐ.டி. ரூ.250 கோடி நிதியில் பல்வேறு கட்டுமானங்கள் நிறைவுற்று செயல்பட்டுவருகிறது. மேலும் அடுத்தகட்ட கட்டுமானங்கள் மற்றும் பிற வசதிகள் ரூ.500 கோடி திட்டத்தில் பல்வேறு  பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. 
நிறுவனத்தில் 5 இளநிலை பொறியியல் பிரிவுகளும், 3 முதுநிலை பிரிவுகளும் உள்ளன. அடுத்த கல்வியாண்டில் மெக்கானிக்கல் முதுநிலைப் பிரிவு கொண்டுவர முயற்சி செய்கிறோம். 1,260 மாணவர்கள் பயிலும் நிலையில், வளாகத்தில் விடுதி விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடைபெறவுள்ளன.  காரைக்கால் என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள், வரும் ஆண்டு சேரவுள்ள மாணவர்களைக் கருத்தில்கொண்டு கட்டமைப்புகளைத்  தொடர்ந்து மேம்படுத்திவருகிறோம். அடுத்த 4 ஆண்டுகளில் நாட்டில் உள்ள முக்கிய என்.ஐ.டி.களுக்கு நிகராக, கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.  இங்கு  பல்வேறு பெரு நிறுவனங்கள் வந்து வளாக நேர்காணல் நடத்தி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது  என்றார்.
ஏ.பி.பி. நிறுவன நிர்வாக இயக்குநர் ஜி.என்.வி.சுப்பாராவ் கூறும்போது, ஏ.பி.பி. நிறுவனத்துக்கும் என்.ஐ.டி., ஐ.ஐ.டி. போன்ற நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதும் இருக்கிறது. இந்த கல்வி நிறுவனங்கள் தரமான பொறியியல் மாணவர்களை உருவாக்கித்தருவது எங்களுக்கு வாய்ப்பாக அமைகிறது. பொறியியல் துறையில் தரமும், திறனும் கூடிய மாணவர்கள் தற்போதைய தேவையாக இருக்கிறது. அதனை இதுபோன்ற நிறுவனங்கள் நிறைவேற்றித்தருவது பெரு தொழில்நிறுவனங்கள் முன்னேற்றத்துக்கு சாதகமாக உள்ளது என்றார். பேட்டியின்போது என்.ஐ.டி. பதிவாளர் ஜி.சீதாராமன் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com