நவோதயா வித்யாலயா பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

ஜவஹர் நவோதயா வித்யாலயா பளளியில் 9-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஜவஹர் நவோதயா வித்யாலயா பளளியில் 9-ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து, பள்ளி முதல்வர் பி. ஹெலன்மேரி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியில் இயங்கி வரும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 2019-20-ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் 22 காலியிடங்களுக்கு மட்டும் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி அக்.15 முதல் தொடங்கியுள்ளது. விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ய்ஹஸ்ர்க்ஹஹ்ஹ.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணைதளத்தில் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தெரிவு நிலைத் தேர்வுத் தேதி 2.2.2019 நடைபெறும். ஆங்கிலம் அல்லது இந்தியில் தேர்வு எழுதலாம். தேர்வெழுத விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர்கள், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள  அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 2018-19-ஆம் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பில் படித்துக்கொண்டிருத்தல் அவசியம். 1.5.2003 -இல் இருந்து 30.4.2007-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். காரைக்கால் ஜவஹர் நவோதயா வித்யாலயா அல்லது நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் நுழைவுத் தேர்வு நடைபெறும். மேலும், விவரங்களுக்கு நவோதயா  பள்ளி முதல்வரை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com