அரசுப் பள்ளியில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி

காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில்பத்து பகுதியில் உள்ள தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி துணை முதல்வர் கே. கோவிந்தராஜன் தலைமையில் பாரதியார் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, இப்பள்ளியின் முன்னாள் மாணவர் (1974- 79 ஆம் ஆண்டுகளில்  படித்தவர்)  தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வை. நமச்சிவாயத்தின் தமிழ் புலமை, பாரதியின் மேல்கொண்ட பற்றின் அடிப்படையில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
பாரதியாரின் பாடல் தொகுப்பான பாரதி 66-இல், முதல் பாடலை தடையின்றி முழுமையாக ஒப்பித்து பாரதிக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், நிகழ்ச்சியில் கம்பராமாயண காதையையும், சிலப்பதிகார காதையையும் மாணவர்களுக்கு தொடர்ச்சியாகவும், வேகமாகவும் ஒப்பித்தார். மாணவர்கள் அனைத்து வகுப்பினரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பாரதியின் பல்வேறு சிறப்புகள் குறித்து ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு விளக்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  தமிழாசிரியர் எஸ். ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com