பயிர்க் காப்பீடு பிரிமியம் செலுத்த டிச. 5 வரை கால அவகாசம்

நிகழ்ப் பருவ நெல் சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கான கால அவகாசம் டிச. 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தில் நிகழ்ப் பருவ சம்பா, தாளடி நெல் சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கான கடைசி தேதி நவ. 30 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசம் தற்போது டிச. 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை பயிர்க் காப்பீடு பிரிமியம் செலுத்தாத விவசாயிகள், அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ள சேவை மையங்களில் ஏக்கருக்கு ரூ. 375 வீதம் டிச. 5-ஆம் தேதிக்குள் பிரிமியம் செலுத்தி, பயிர்க் காப்பீடு திட்டத்தில் இணைந்திடுமாறு ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com