சிறந்த தடகள வீரர்களை உருவாக்குவேன்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் சாந்தி

தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய சிறந்த  தடகள விளையாட்டு வீரர்களை உருவாக்குவேன் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் எஸ். சாந்தி கூறினார்.
சிறந்த தடகள வீரர்களை உருவாக்குவேன்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் சாந்தி

தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய சிறந்த  தடகள விளையாட்டு வீரர்களை உருவாக்குவேன் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியாளர் எஸ். சாந்தி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், காதக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. தடகள விளையாட்டு வீராங்கனையான இவர், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு  போட்டிகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
2006-இல் கத்தார் நாட்டில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில்  பங்கேற்று  தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
பின்னர் பாலின சர்ச்சையில் சிக்கியதால், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெற்ற பதக்கம் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள இந்திய  விளையாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ராஜீவ்காந்தி சிறப்பு சரக விளையாட்டு மையத்தில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு தடகளப் பயிற்சியை அளித்து வந்தார்.
இந்நிலையில், சாந்தியின் சாதனைகளைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு, சென்னை  நேரு விளையாட்டு அரங்கில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மகளிர் விடுதியில் உள்ள மகளிருக்கான தடகளப் பயிற்சியாளராக நியமனம் செய்து அதற்கான பணி ஆணையை செவ்வாய்க்கிழமை வழங்கியது.
இதைத் தொடர்ந்து, மயிலாடுதுறைக்கு வருகை தந்த எஸ்.சாந்தி, புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
 மகளிருக்கான தடகளப் பயிற்சியாளராக தமிழக அரசு என்னை நியமனம் செய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அரசு வழங்கியுள்ள இப்பணி என்னை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் என நம்புகிறேன். இதன் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில் சிறந்த வீரர்களை நிச்சயம்  உருவாக்குவேன். பணி ஆணை வழங்கிய தமிழக அரசுக்கு  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
எம்எல்ஏ வாழ்த்து: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்  பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எஸ்.சாந்தியை, மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com