பண்ணைக் கருவிகள் பராமரிப்புப் பயிற்சி

சிக்கல், வேளாண் அறிவியல் நிலையம், கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மண்டலம் சார்பில் பண்ணைக் கருவிகள் இயக்குதலும்

சிக்கல், வேளாண் அறிவியல் நிலையம், கோவை மத்திய வேளாண் பொறியியல் நிறுவன மண்டலம் சார்பில் பண்ணைக் கருவிகள் இயக்குதலும், பராமரித்தலும் குறித்த பயிற்சி முகாம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய வேளாண் பொறியியல் நிறுவன முதுநிலை விஞ்ஞானி த. செந்தில்குமார், வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் பா. காமராஜ், மத்திய வேளாண் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு முதன்மை விஞ்ஞானி ரவீந்திரநாயக் ஆகியோர் பண்ணைக் கருவிகளின் பயன்பாடு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்த தொழில்நுட்பங்களை விளக்கி, செயல் விளக்கம் அளித்தனர்.
சிக்கல், வேளாண் அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ. அனுராதா,
வேளாண் அறிவியல் நிலைய விரிவாக்கத் துறை உதவி பேராசிரியர் செ. திலகம், வேளாண் அறிவியல் நிலைய வானவியல் துறை உதவி பேராசிரியர் ரா. ரவி, தொழில்நுட்ப திட்ட உதவியாளர் வீ. ஞானபாரதி ஆகியோர் பேசினர்.
திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com