வேதாரண்யம் கிராமப்புறங்களில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் கிராமப்புற பகுதிகளில் வியாழக்கிழமை திடீர் மழைப் பொழிவு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேதாரண்யம் கிராமப்புற பகுதிகளில் வியாழக்கிழமை திடீர் மழைப் பொழிவு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேதாரண்யம் பகுதியில் கடந்த பல நாள்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. காவிரி நீர் பிரச்னை ஏற்பட்ட நிலையில், மழையும் இல்லாத காரணத்தால் நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள சம்பா நெல் சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை கோடியக்கரை பகுதியில் மழைப் பொழிவு ஏற்பட்டது. பகலில் வேதாரண்யம் பகுதியின் தெற்குப் பகுதியில் உள்ள தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் கிராமங்களின் சுற்றுப் பகுதியில் சுமார் 40 நிமிடங்கள் மழைப் பொழிவு இருந்தது.

நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நெல் வயல்களுக்கு இந்த மழை ஏற்றவையாக அமைந்துள்ளது. ஆனாலும், வியாழக்கிழமை பகலில் ஏற்பட்ட இந்த மழை வேதாரண்யத்தின் வடக்குப் பகுதி, நகரப் பகுதியில் இல்லை.

பல நாள்களுக்குப் பிறகு பெய்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, தொடர்ந்து மழைப் பொழிவு ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com