திருவள்ளுவர் சிலை ஊர்வலம்: இசைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் 25-ஆம் ஆண்டு நிறைவு திருவள்ளுவர் நாள் வெள்ளி விழாவையொட்டி, திருவள்ளுவர் வெண்கலச் சிலை ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.

சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டுப் பேரவையின் 25-ஆம் ஆண்டு நிறைவு திருவள்ளுவர் நாள் வெள்ளி விழாவையொட்டி, திருவள்ளுவர் வெண்கலச் சிலை ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, திருவள்ளுவர் ஞானமன்றம் தலைவர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். சாயிராம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கி.ராஜா, திருவண்ணாமலை திருவள்ளுவர் தொண்டு மையத்தைச் சேர்ந்த ப. குப்பன் ஆகியோர் கொடியசைத்து, திருவள்ளுவர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
மாவட்ட அரசு இசைப் பள்ளி மாணவ, மாணவியர் நாகஸ்வர, தவில் இசை முழக்கத்துடன், முக்கிய வீதிகளின் வழியாக
காந்தி பூங்கா வரை ஊர்வலம் நடைபெற்றது.
பின்னர், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு திருக்குறள் பண்பாட்டுப் பேரவை செயலாளர் கு.ராஜாராமன் தலைமையில் நகர வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.கே.ஆர்.சிவசுப்பிரமணியன் மற்றும் பேரவை நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், திருக்குறள் பண்பாட்டுப் பேரவையைச் சேர்ந்த வழக்குரைஞர் சுந்தரய்யா, கோவி.நடராஜன், சா. காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேரவை பொருளாளர் முரு.முத்துக்கருப்பன் வரவேற்றார். முன்னாள் கவுன்சிலர் காமராஜ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com