மாற்றுத் திறனாளிகள் 32 பேருக்கு மோட்டார் சைக்கிள்: அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்

நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் 32 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட

நாகை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் 32 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
இதற்கான விழா, நாகை புத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:
நாகை மாவட்டத்தில் 30,661 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 16,831 பேருக்கு நலவாரிய அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 6 ஆண்டுகளில் 149 பேருக்கு ரூ. 82 லட்சம் மதிப்பில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்கான ஊனத்தின் சதவீதத்தை 60-இல் இருந்து 40-ஆக குறைத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி, தமிழக அரசு மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்ட உதவிகளை மாற்றுத் திறனாளிகள் தங்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக, மாற்றுத் திறனாளிகள் 32 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உள்பட 69 பேருக்கு ரூ. 22 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தலைமை வகித்தார். நாகை தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் கே. கோபால், பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com