கோயிலும், கல்வியும்தான் மனிதனை நிலைநிறுத்தும்: தருமபுரம் இளைய சந்நிதானம் அருளாசி

கோயிலும், கல்வியும்தான் ஒரு மனிதனை, எல்லா வகையிலும் மனிதனாக நிலைநிறுத்தும் என, தருமபுரம் இளைய சந்நிதானம் அருளாசி வழங்கினார்.

கோயிலும், கல்வியும்தான் ஒரு மனிதனை, எல்லா வகையிலும் மனிதனாக நிலைநிறுத்தும் என, தருமபுரம் இளைய சந்நிதானம் அருளாசி வழங்கினார்.
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் குருஞானசம்பந்தர் மிஷன் சி.முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தாளாளர் குஞ்சிதபாதம் தலைமை வகித்தார். செயலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முதல்வர் சந்திரசேகரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், தருமபுர ஆதீனம் இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் பங்கேற்று, மாணவர்களுக்கு அருளாசி வழங்கி பேசியது:
மாணவர்கள் எந்நாளும் பெற்றோர்களை வணங்கி ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைக் கற்கவேண்டியது அவசியம். இதைத்தான் வைத்தீஸ்வரன் கோயில் வரலாறு உணர்த்துகிறது. பள்ளிகளில் நீதி நூல்கள் கற்பிக்கப்படவேண்டும். பணம் சம்பாதிக்கும் நோக்கில் கல்வி கற்கக் கூடாது. அவ்வாறு சிலர் கஷ்டப்பட்டு உடல் ஆரோக்கியத்தை இழந்து சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மீண்டும் இழந்த ஆரோக்கியத்தைப் பெற மருத்துவமனைக்கு செலவு செய்கிறார்கள். தொழில் கல்வியுடன் கூடிய வாழ்க்கை கல்வியையும் கற்க வேண்டும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை வீட்டிற்கு சென்று மனதில் அசைப்போட்டு நன்கு படிக்கவேண்டும். அன்னப்பறவையைபோல், மாணவர்கள் நல்ல விஷயங்களை தேர்தெடுத்து கல்வி கற்க வேண்டும். மாணவர்கள் சிறு வயது முதலே கொள்கைப் பிடிப்போடு படித்தால் பிற்காலத்தில் நிச்சயம் வெற்றியைத் தேடி தரும் என்றார்.
தொடர்ந்து, மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. நிகழ்ச்சிகளை தமிழாசிரியைகள் சரண்யா, துர்காதேவி ஆகியோர் தொகுத்து வழங்கினர். முன்னதாக, குருஞானசம்பந்தருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. துணை முதல்வர் ஜெகதீஸ்குமார் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com