நேரடி நெல்கொள்முதல் நிலைய சுமைதூக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த கோரிக்கை

நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல்நிலையம், அரசு நெல் சேமிப்பு நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க

நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல்நிலையம், அரசு நெல் சேமிப்பு நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னார்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சங்க தலைவர் எம்.ராஜ்குமார் தலைமை வகித்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய, மாநில அரசுகள் நிகழாண்டு சம்பா சாகுபடிக்காவது உரிய நீரை பெற்றுத்தந்து சாகுபடியினை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்தின் உரிமையை காத்திட வேண்டும். கொள்முதல்நிலையங்கள், சேமிப்புக்கிடங்குகளில் சரக்கினை ஏற்றி, இறக்க குறைந்த கூலி, பணி நிரந்தரம் இல்லை என்ற காரணத்தினால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க சுமை தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி, கூலியை உயர்த்தி வழங்கி தமிழகஅரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
2016-2017-ம் கல்வி ஆண்டில் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டும் வகையில்,12-ம் வகுப்பில் கே.பி.எஸ்.நிதிஷ்குமார், ஆர்.ரகுராஜ், எம்.கே.பூர்ணிமா ஆகியோருக்கும், 10-ம் வகுப்பில் என்.தினேஷ்ராஜ், எம்.கே.நிவேதா, எம்.வனிதா ஆகியோர் முறையே முதல், இரண்டாம், மூன்று இடங்களை பெற்றதையடுத்து அவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் ஊக்கத் தொகை, சான்றிதழ், நினைவுப் பரிசினை மன்னார்குடி காவல்துணைக் கண்காணிப்பாளர் வ.அசோகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்க செயலர் ஜி.சாமிநாதன், பொருளாளர் எஸ்.செந்தில்குமார், ஆலோசகர் ஆர்.வி.ஆனந்த் ஆகியோர் பேசினர்.
இதில் சிறப்பு தலைவர் எஸ்.மணி, ஆலோசகர் ராஜாராம், நிர்வாகி ஜி.கணேசன், துணைச் செயலர் எஸ்.எம்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com